தண்ணீர் இல்லா விரதம்
ADDED :2137 days ago
தர்மரி்ன் தம்பி பீமன், வியாசரின் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருக்க ஆசைப்பட்டான். ஏகாதசியன்று சாப்பிட முடியாது. பீமனோ சாப்பாட்டு ராமன். அவனது வயிற்றில் விருகம் என்னும் அக்னி இருந்ததால் பசி தாங்க முடியாது. எனவே ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும் என்று அவர் கூறினார். பீமனும் விரதமிருந்து பலன் பெற்றான். இதை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்று அழைப்பர். நிர்ஜலா என்றால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பொருள்.