ராமேஸ்வரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனம்
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஜன.1ல் சுவாமி நடராஜருக்கு கோயில் குருக்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து ஜன.9 வரை கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் வலம் வந்தார். நேற்று நடராஜர் சன்னதி முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளிய போது 7 திரைகள் விலக்கப்பட்டதும், சுவாமி நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார்.
பின் நடராஜருக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்: சிவகாமி அம்மாளுடன் நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாணி கிராம சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இந்த தரிசனத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமூக சபை செய்திருந்தது. திருவாடானை