உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று புதிதாய் பிறந்தோம்

இன்று புதிதாய் பிறந்தோம்

மார்கழியின் கடைசி நாளில் நடத்தும் விழா போகி. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது இந்நாளின் நோக்கம். அதாவது பழமையை விட்டு மனிதன் புதுமைக்குள் செல்ல வேண்டும் என்பதே. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை வழங்குவது போகி. அதே நேரம்  மேலை நாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. நாகரிகம் என்பது நம் நாட்டு  பாரம்பரியம், பண்பாட்டை மையமிட்டதாக அமைய  வேண்டும்.  போகியன்று வீட்டைத் துாய்மைப்படுத்தி பழைய குப்பைகளை எரிப்பர். கிராமங்களில் வீட்டு வாசலில் வெள்ளை அடித்து செம்மண் பட்டை பூசுவர். வீடு முழுக்க மாக்கோலம் இடுவர். வீட்டை துாய்மைப்படுத்தி அழகாக்குவது போல நம் மனதில் நல்ல சிந்தனை மலர போகி வழிகாட்டுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !