கீரை கொடுத்தா கல்யாணம்
ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து நீச்சமாக இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்னைகள் உண்டாகும். முற்பிறவியில் பசு சாபம் இருப்பவருக்கு இந்த தோஷம் ஏற்படுவதுண்டு. இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, புல், பழங்கள் கொடுப்பதன் மூலம் தோஷம் நீங்கி சாப நிவர்த்தி பெறலாம். அப்போது கோக்ராஸ ஸ்லோகம் என்னும் பசுவுக்குரிய ஸ்லோகத்தைச் சொல்வது நல்லது. இதன் பொருளைச் சொன்னாலும் புண்ணியமே!
ஸௌரபேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதி க்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ் த்ரைலோக்கய மாதா:!
“காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே! பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக!” என்பது இதன் பொருள். பின்னர் பசுவை மூன்று முறை வலம் வந்து,
கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத் தஸ்மாச் சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!!
என்று சொல்ல வேண்டும். “பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பர லோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்செய்வாயாக என்பது இதன் பொருள்.