ஐயப்ப சுவாமி கோயிலில் மகரஜோதி விழா
ADDED :2171 days ago
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.நேற்று முன்தினம் நடந்த விழாவில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள்நடந்தது. கோயிலுக்கு நேர் எதிரில் உள்ள டி.சுப்புலாபுரம் நாழி மலையில் தீபம் ஏற்றி மகர ஜோதியாக வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துவன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.