பழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்
ADDED :2134 days ago
பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வாக மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுவதால் மலைக்கோயிலில் பூஜை நேரம் மாற்றப்படுகிறது.
முருகனின் மூன்றாம்படை வீடான பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றன.இதில் ஒரு பணியாக, மூலவருக்கு வரும் ஜன.20ம் தேதி, அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி அன்று பூஜை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.அன்று காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 10:30 மணி வரை சிறப்பு பூஜைகள், யாக சாலை பூஜைகள் நடைபெறும். காலை 9:45 மணிக்கு மேல் அஷ்ட பந்தன மருந்து சாற்றப்படும். இதனால் மலைக்கோயிலில் காலை 10:30 மணிக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கபடுவர் என, பழநி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.