உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்துார்பேட்டையில் ஏழுமலையான் கோவில்

உளுந்துார்பேட்டையில் ஏழுமலையான் கோவில்

 உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான இடத்தை, திருப்பதிதேவஸ்தான போர்டு குழுவினர் தேர்வு செய்தனர்.


திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, நேற்று நடந்தது.தேவஸ்தான போர்டு உறுப்பினர், குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர், நேற்று உளுந்துார்பேட்டைக்கு சென்றனர்.இக்குழுவினருக்கு, ஸ்ரீகனகவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் நிர்வாகிகள், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.அதைத் தொடர்ந்து, உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே, திருப்பதி தேவஸ்தானம் கோவில் அமையவுள்ள, 3 ஏக்கர் இடத்தை பார்வையிட்டனர். பின், அந்த இடத்தில், கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக, அவர்கள் உறுதியளித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !