லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :2122 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில், இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது.
விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. முதல் நாள் காலை, பெருமாள சேஷ வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சந்திர பிரபை வாகனம், மோகினி அலங்காரம், வேணுகோபாலன் அலங்காரம், யானை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.