மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
2078 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
2078 days ago
வீட்டுக்கு ஒரு நாயை காவலுக்கு வைக்கலாம். பணமுள்ளவர்கள் கூர்க்காவை நியமிக்கலாம். ஆனால் மனிதர்கள் தங்கள் உடம்பில் இருக்கும் இரண்டு எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள யாரை நியமிக்கப் போகிறார்கள்? அதில் ஒன்று நாக்கு. இன்னொன்று பாலியல் உறுப்பு. கடும்வார்த்தைகளை உதிர்ப்பதன் மூலம் நாக்கு துன்பத்தை வரவழைக்கிறது. இருவர் சண்டையிடும் போது வாக்குவாதம் முற்றுகிறது. தவறான வார்த்தைகள் வெளிப்படும் போது, ஒருவருக்கொருவர் தாக்க முயலும் போது உயிர் சேதம் கூட ஏற்படும். இது பற்றி நாயகம்,“மனிதன் சில சமயங்களில் இறைவனுக்கு விருப்பமான ஒன்றைப் பேசுகிறான். அப்போது இறைவன் அவனது அந்தஸ்தை உயர்த்துகிறான். ஆனால் வெறுப்புடன் பேசும் போது படுகுழியில் விழுகிறான்” என்கிறார். பாலியல் உறுப்பாலும் தீங்கு விளைகிறது. பெண்களை தீய நோக்குடன் பார்க்கும் கண்கள் கெட்ட கண்களாகும். அது மட்டுமல்ல, அவர்களை வர்ணித்து பேசுவதும், கேட்பதும் பாவச் செயலே. இதுவே எல்லை மீறும் போது ஆபத்தாய் முடியும். இதனால் மனிதன் நற்பண்புகளை இழக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க இறைவனுக்கு அடிபணிந்து கட்டுப்பாட்டுடன் வாழ்வது ஒன்றே வழி.
2078 days ago
2078 days ago