தந்த அலங்காரம்!
ADDED :2105 days ago
கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் பகவத் விநாயகர். வேதாரண்யத்தைச் சேர்ந்த பகவர் என்ற முனிவருக்கு, "திருக்குடந்தை தலமானது காசியைவிட அதிகம் வீசம்கொண்டது என்பதை உணர்த்தி அருள்பாலித்த பிள்ளையார் இவர். பகவர் முனிவருக்கு அருளியதால் பகவத் விநாயகர் என்ற திருப் பெயர் இவருக்கு. மகா பெரியவா கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வண ங்கிச்செல்வாராம். 1952-ம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமவுலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகா பெரியவா யானையின் இரண்டு தந்தங்களையும் பகவத் விநாயகருக்கு அளித்து வழிபட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் பகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!