காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, தை மாதம் முதல் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது.
சுவாமிக்கும், நந்திக்கும், மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், தயிர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.அதன் பின், மாலை, 6:10 மணிக்கு ரிஷப வாகனத்தில் தேவியருடன் காசி விஸ்வநாதர் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிணத்துக் கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், அரிசி மாவு, எலும்பிச்சை போன்றவைகளால் அபிேஷ பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து, தீபராதணை காண்பிக்கப்பட்டது. சிவலோகநாதர், சிவலோக நாயகி உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.