அன்னாள் ஆலயத்தில் நவநாள் திருப்பலி
ADDED :5021 days ago
திண்டுக்கல்: ராமையன்பட்டி புனித அன்னாள் ஆலயத்தில் நவநாள், திருப்பலி மாதந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள ராமையன்பட்டி புனித அன்னாள் ஆலயத்தில், ஒவ்வொரு மாதமும் 26 ம் தேதி மாலை 6.30 மணிக்கு நவநாள், திருப்பலி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதல் திருப்பலியும், தேர்பவனி நடந்தது. கரிசல்பட்டி பங்கு குரு டேவிட், ஆரோக்கிய தாமஸ் பங்கேற்றனர்.