எல்லாம் பொய், மாயை என்கிறார்களே. இந்த மாயை உண்மையா?
சித்தாந்திகளும், வேதாந்திகளும் கண்டுபிடித்திருக்கும் விஷயம் இது. நமக்கு மகிழ்ச்சியை தரும் என்று, ஒரு விஷயத்தை நாம் செய்கிறோம். ஆனால் அது துன்பத்தைக் கூட தந்து விடுகிறது. வீட்டில் டிவி வைத்து கொண்டால் மகிழ்ச்சி என்று வாங்குகிறோம். ஆனால், அது உண்மையான மகிழ்ச்சியை தருகிறதா? தேர்வு நேரத்தில் கிரிக்கெட் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. தேர்வில் தோற்றால் என்னாகிறது. தேர்வுகளில் வெற்றி பெற்று மேல் வகுப்புகளை முடித்து நல்ல வேலை பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி. உண்மையான மகிழ்ச்சிக்கு ஆதாரமே இந்த சிந்தனை தான். எது உண்மையான மகிழ்ச்சி என்று அறியாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற அடிப்படையில் நாம் மதிமயங்கி துன்பப்படுகிறோம். இதனையே பொய், மாயை என்ற வார்த்தைகளில் வகுத்திருக்கிறார்கள். எல்லாம் பொய் என்பது அறியாமையைக் குறிக்கிறது. மாயை என்பது நாம் மதி மயங்கி நிற்றலைக் குறிக்கிறது.