செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2386 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே எல்.ஆர்.ஜி.,நகர் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலச பூஜை, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 108 மூலிகை திரவியங்களால் பூஜை, மூல மந்திரம், காயத்ரி மந்திரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் கால யாகபூஜையையொட்டி விநாயகர் வழிபாடு, மண்டப அர்ச்சனை, ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து மூன்று மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.