உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது.

புதுச்சேரி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூன்றாவது தை வெள்ளியை முன்னிட்டு 32ம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தும், வண்ண மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. லலிதா சகஸ்கரநாம பூஜையும், லட்சுமி அஷ்டோத்திரம் செய்து 108 குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்க தலைவர் தண்டபாணி, செயலர் தினஷே், பொருளாளர் செந்தில்முருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !