செஞ்சியில் மதுரகவியாழ்வார் சபை மாத மாநாடு
ADDED :2129 days ago
செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபை மாத மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபை சார்பில் வைணவ மாத மாநாடு செஞ்சி வீராசாமி நைனார் திருமண மண்டபத்தில் நடந்தது. சபைத் தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கோவிந்தன் திருமால் துதி பாடினர். சபை கௌரவத் தலைவர் பழைய செட்டிகுளம் ரகுபதி, விழுப்புரம் சிவரஞ்சனி ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். சபை உறுப்பினர் கோதை மற்றும் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்துகொண்டனர். தசரதன் நன்றி கூறினார்.