வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ஊர்வலம்
ADDED :2128 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வட மாநில சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலம், யாகம் நடத்தினர். உலக நன்மைக்காகவும், நாடு வல்லரசாக வேண்டியும் நேற்று ராமேஸ்வரம் ரதவீதியில் சாதுக்கள் மற்றும் மகராஷ்டிரா, குஜராத், ம.பி., உ.பி.,யை சேர்ந்த 500க்கு மேலான பக்தர்கள் புனித கங்கை நீர் கலசத்துடன் ஊர்வலம் சென்றனர்.
மும்பை மடாதிபதி மாதுவாச்சார்யார், ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா டிரஸ்ட் நிர்வாகி சீதாராம்தாஸ் தலைமை வகித்தனர் புனித நீரை ராமநாதசுவாமி சன்னதியில் அபிேஷகம் செய்தனர். அக்னி தீர்த்தம் அருகில் 9 குண்டத்தில் யாகம் நடத்தினர். மாவட்ட பா.ஜ., தலைவர் முரளீதரன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.