வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜை
ADDED :2128 days ago
புதுச்சேரி : சன்னியாசிக்குப்பம் வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜைநடந்தது.திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் கிராமத்தில், உள்ள பழமை வாய்ந்த வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி பூஜை நடந்தது. அதனையொட்டி அம்மனுக்கு பால், தேன், விபூதி, இளநீர், சந்தன அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.