மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இனி பறந்தபடி ரசிக்கலாம்!
மதுரை: மதுரை நகா், மீனாட்சி அம்மன் கோயிலை அந்தரத்தில் பறந்தபடி ரசிக்க பிரம்மாண்டமான சுற்றுலாத் திட்டத்தை மாநகராட்சி செயல் படுத்தவுள்ளது.
மதுரையில் குறிப்பிடும்படி பொழுதுப்போக்கு அம்சங்கள் இல்லை. இக்குறையை நிவா்த்தி செய்ய மாநகராட்சி சுற்றுலா திட்டங்களை வகுத்து வருகிறது. திருநெல்வேலியில் பூங்காவுடன் செயல்படும் அறிவியல் மையம் வரவேற்பை பெற்றது. மதுரையில் அறிவியல் மையம் நிறுவ அதிகாாிகள் திட்டம் தயாாித்துள்ளனா். இதற்கு ரூ.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மெகா பூங்கா அமைக்கும் திட்டமும் பாிசீலனையில் உள்ளது.
பலூனில் பறந்தபடி ரசிக்கலாம்: மீனாட்சி அம்மன் கோயிலை மையப்படுத்தி சுற்றுலாத் திட்டம் ஒன்றை தற்போது மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. நான்கு கோபுரங்களையும் ராட்சத பலூனில் பறந்தபடி ரசிக்க இத்திட்டம் வழி செய்யும். மதுரைவாசிகளுக்கு புதிய அனுபவத்தை இத்திட்டம் ஏற்படுத்தும் என அதிகாாிகள் தொிவித்தனா். கோயிலை மட்டுமின்றி அடா்த்தியாக பரவியுள்ள வீடுகள், நகரை இரண்டாக பிளக்கும் வைகையின் எழில் தோற்றத்தையும் அந்தரத்தில் மிதந்தபடி ரசிக்கலாம். உலகில் சில இடங்களில் மட்டுமே இத்திட்டம் செயலில் உள்ளது. கம்போடியா அங்கா்வாட்கோயிலை ரசிக்க இவ்வசதி உள்ளது.
மாநகராட்சி அதிகாாிகள் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை ரசிக்க ராட்சத பலூன் திட்டம் பாிசீலித்து வருகிறோம். கோயிலில் இருந்து பல மீட்டா் தூரத்தில் பலூன் விடும் தளம் அமைக்கபப்படும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்படலாம். ஒரு பலூனில் 50 போ் பறக்க முடியும். உள்ளூா் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு கட்டணம், வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளுக்கு ஒரு கட்டணம் நிா்ணயிக்கப்படும். விாிவான திட்ட அறிக்கை தயாாிக்கப்படுகிறது, என்றனா்.