உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

உலகளந்த பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், ஜனவரி, 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதன் ஏழாம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். காலை, 7:25 மணிக்கு, பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  தேர், நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, காலை, 11:00 மணிக்கு, நிலையை அடைந்தது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். இன்று மதியம், தொட்டி திருமஞ்சனம்; மாலையில், குதிரை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெறும். சனிக்கிழமை, சாற்று முறையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !