உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு

 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், 18 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக, ராசிபுரம் பட்டினம் கல் குவாரியில், 1 லட்சம் கன அடிக்கு, உயர் தர கற்கள் வெட்டி எடுக்க, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 2018 பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில், வீர வசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதையடுத்து, 18 கோடி ரூபாய் மதிப்பில், மண்டபத்தை புனரமைக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில், வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து, உயர்தர கற்களுக்காக, குவாரியை தேர்வு செய்யும் பணி நடந்தது.ராசிபுரம் பட்டினம் குவாரியில் இருந்து, 1 லட்சம் கன அடிக்கு, உயர்தர கற்கள் வெட்டி எடுக்க, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.அடுத்த வாரம், குவாரியில் பூமி பூஜை செய்து, கற்கள் வெட்டி எடுக்கப்பட உள்ளது. புனரமைப்பு பணி முடிந்ததும், 2022ல், கோவில் கும்பாபிஷேகம்நடத்த, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !