உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளார் பிறந்த மருதூரில் சன்மார்க்கக் கொடி ஏற்றம்

வள்ளார் பிறந்த மருதூரில் சன்மார்க்கக் கொடி ஏற்றம்

கடலூர் : தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளார் பிறந்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்வு துவங்கியது.

புவனகிரி அருகே அமைந்துள்ளது மருதூர் கிராமம்.இக்கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மாலை  5.54 மணிக்கு இராமையா - சின்னம்மை என்பவர்களுக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார் இராமலிங்கம். கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.  புலால் உணவு உண்ணக்கூடாது.  எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. போன்ற பல்வேறு கருத்துக்களை மனித வாழ்வியலுக்கு எடுத்துக்கூறிய ராமலிங்கம் என்கின்ற வள்ளலார் பெருமான் அவரித்த மருதூர் கிராமத்தில்     நாளை  வடலூரில் நடைபெறுகின்ற தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் அவரித்த மருதூர்  இல்லத்தில் இன்று காலை 8 மணி அளவில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.


சன்மார்க்கத்தினர் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு  அகவற்பா படித்து அருட்பெருஞ்ஜோதி கையில் ஏந்தி சன்மார்க்கக் கொடி ஏற்றினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திற்கு  பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்து அவரது பிறந்த இடத்தை தரிசனம் செய்வர். சன்மார்க்க கொடியேற்றத்துடன்  இன்று ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் பிப்.8,9,10 வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.  காலை முதல் தொடங்கும் அன்னதானம்  இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !