பச்சமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா திருக்கல்யாணம்
ADDED :2109 days ago
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோபி அருகே, பச்சமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை நடந்தது. பின் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன், சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சண்முக சுப்ரமணியருக்கு, சிகப்பு சாற்றி அலங்காரம் நடந்தது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.