மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2061 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2061 days ago
ஓசூர்: மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி மற்றும் அங்குசகிரி திம்மராய சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில், பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 1ல், ரதசப்தமி உற்சவத்துடன் துவங்கியது. கடந்த, 5ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமி கல்யாணோற்சவம், காலை, 10:30 மணிக்கு கருடோற்சவம், மாலையில் உரடோற்சவம் மற்றும் கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மதியம், 12:15 மணிக்கு நடந்தது. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டதால், தளி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில், இன்று (பிப்., 10) பல்லக்கு உற்சவம் நடக்கிறது. வரும், 16ல், வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. சூளகிரி அடுத்த அங்குசகிரி கொத்தூர் கிராமத்தில் உள்ள, திம்மராய சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி கோவில் ரத உற்சவ விழா கடந்த, 7ல் அங்குரார்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ரத உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
2061 days ago
2061 days ago