நெஞ்சம் மறப்பதில்லை
ADDED :2249 days ago
பெல்ஜியம் நாட்டில் சாதாரண குடும்பத்தில் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவர் டேமியன். தந்தை தானிய வியாபாரம் செய்தார். கல்லுாரி படிப்பை முடித்த டேமியன் மிஷினரியில் பணியாற்றச் சென்றார். ஹவாய் நாட்டில் ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். ஒரு சமயம் அங்கு குஷ்ட ரோகம் பரவத் தொடங்கியது. நோயாளிகளை தனிப்படுத்தும் விதமாக மோலக்காய் என்னும் தீவுக்கு மக்களை அரசு அனுப்பியது. மருத்துவ வசதி ஏதும் இல்லாததால் மக்கள் விரக்தியடைந்தனர். நடைப்பிணமாக வாழ்ந்த அவர்களின் மீது பரிவு கொண்டார் டேமியன். பிஷப் மெய்கிரேட் என்பவருடன் மோலக்காய் தீவுக்குச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.