சுதர்சன ஹோமம் என்பது என்ன?
ADDED :2083 days ago
மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதம் ‘சுதர்சனம்’ எனப்படும். நோய், எதிரி பயம், மனக்குழப்பம், திருஷ்டி போன்றவற்றில் இருந்து காக்க வல்லது சுதர்சனம். இதனை வழிபடவும், யாகம் செய்து பலன் பெறவும் விதிமுறைகள் உள்ளன. சுதர்சன ஹோமத்தை தகுதியானவர்களின் மூலம் நடத்தினால் தீமை அகலும். நன்மை பெருகும்.