மேலும் செய்திகள்
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
2048 days ago
நால்வர் இசைத்தமிழ் ஆராதனை அவிநாசி கோவிலில் கோலாகலம்
2048 days ago
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
2048 days ago
தன்னலம் கருதாத தனுசு ராசி நேயர்களே! சூரியன் ராசிக்கு 3ம் இடத்தில் இருப்பதால் நன்மை தருவார். சுக்கிரன் மார்ச்1ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். அதற்காக கவலை கொள்ளத் தேவை காரணம் குருவின் பார்வையால் பிரச்னைகளை எளிதில் முறியடிப்பீர்கள்.குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். சுக்கிரனால் நன்மை அதிகரிக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களின் மத்தியில் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். பிப்.29க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். பெண்களுக்கு கணவர், குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். பிப்.29க்கு பிறகு தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். குருவின் பார்வையால் பொன், பொருள் சேரும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் கைகூட வாயப்புண்டு. சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். உடல்நிலை திருப்தியளிக்கும். சிறப்பான பலன்கள்* வியாபாரிகள் லாபம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பிப்.29க்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவர். * மருத்துவர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மேலதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். * அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் ஸ்திர தன்மையில் இருப்பர். பெண்களின் ஆதரவால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.* கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சுமாரான பலன்கள்* தொழிலதிபர்களுக்கு பிப்.22 – மார்ச்11 வரை பகைவரால் இடையூறு வரலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.* தரகு, கமிஷன் தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர்.* அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மார்ச் 11க்கு பிறகு அவப்பெயருக்கு ஆளாகலாம். சிலருக்கு வீண்கவலை வரலாம்.* மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. * வக்கீல்கள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே புதிய வழக்குகள் கிடைக்கும்.* ஆசிரியர்கள் வேலையில் பிரச்னையை சந்திக்கலாம். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண் அலைச்சல் ஏற்படலாம். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடைய முடியாது. * விவசாயிகள் போதிய மகசூலை பெற அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்* விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. * பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அக்கறையுடன் மட்டுமே பலன் கிடைக்கும். குருவின் பார்வையால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது நல்ல நாள்: பிப்.13,14,15,18,19,20,23,24,25, மார்ச் 1,2,3,4,5,10,11,12,13கவன நாள்: மார்ச் 6,7 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 7,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புபரிகாரம்:* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்* வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
2048 days ago
2048 days ago
2048 days ago