ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2420 days ago
ஊட்டி:ஊட்டி ஜெயின் கோவிலில், 45வது அன்னதான நிகழ்ச்சி; சிறப்பு வழிபாடுகள் நடந்தது.ஊட்டி மெயின் பஜார் ஜெயின் கோவில் முன்புறம் மகாவீர் கேம்ப் என்ற பெயரில், மாதந்தோறும், இரண்டாவது வெள்ளி கிழமை சிறப்பு அன்னதானம் நடந்து வருகிறது.நேற்று நடந்த, 45வது அன்னதானதின் போது நடந்த சிறப்பு வழிபாடுகளை, ஜெயின் சாதுக்கள் நடத்தினர். பின்பு, 350 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மகாவீர் கேம்ப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.