திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED :2062 days ago
கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் மற்றும் திருத்தேர் உற்சவம், கடந்த 5ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 6ம் தேதி காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினசரி சிறப்பு அபிேஷக ஆராதணை நடைபெற்று வந்தது.செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது.