அமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்
ADDED :2062 days ago
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது.
ஜம்மு - காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது என, ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் கவர்னர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் இன்று நடந்த கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.