நடராஜர் தரிசனத்தில் கைலாசநாதர் வீதி உலா
ADDED :2061 days ago
ஓமலூர்: நடராஜர் தரிசனத்தில், கைலாசநாதர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். தாரமங்கலம், கைலாசநாதர் ஆலயத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் பரிவேட்டை நிகழ்வுக்கு பின், நேற்று மாலை, 4:30 மணிக்கு அம்பாள் சமேத நடராஜர் தரிசனத்தில், கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டார். மேளவாத்தியங்கள் முழங்க, பரிவார மூர்த்திகளுடன், நான்கு ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை, தெப்பத்தேர், நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.