சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி
ADDED :2067 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 39ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, 19ம் தேதி துவங்குகிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், சிதம்பரம் வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில், 39வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, 19ம் தேதி துவங்குகிறது.விழாவில், நாடு முழுவதிலும் உள்ள, பல்வேறு நாட்டிய பள்ளிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள பள்ளிகள் சார்பில் பரதம், குச்சுப்புடி, ஒடிசி, நாட்டிய நாடகம், மோகினி ஆட்டம் ஆகியவை நடக்கிறது.வரும், 22ம் தேதி வரை நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில், தினமும் மாலை, 5:45 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.