உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு கோவிலில் மஹா சிவராத்திரி பூஜை துவக்கம்

கிணத்துக்கடவு கோவிலில் மஹா சிவராத்திரி பூஜை துவக்கம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசுவாமி, பேச்சியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் மஹாசிவராத்திரி பூஜை நேற்று முன் தினம் துவங்கியது.கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசுவாமி, பேச்சியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் பிப். 21 மஹாசிவராத்திரி விழா நடக்கிறது.


இவ்விழா, நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. பின், 10:00 மணிக்கு பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு படி விளையாட்டு நடந்தது. தினமும் பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை, படி விளையாட்டு பிப. 19ம் தேதி வரை நடக்கிறது. பின், பிப். 21 மஹாசிவராத்திரியன்று, காலை 5:00 மணிக்கு பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு செண்டாமரம் கொண்டு வந்து ஸ்தாபனம் செய்யப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு ஆற்றுக்கு புறப்படுதல், இரவு 11:00 மணிக்கு ஆற்றிலிருந்து சக்திவேல் சக்தி கரகத்தோடு சுவாமி திருவீதி உலா வந்து கோவிலை அடைதல். பிப். 23ல் பிற்பகல் மகா அபிஷேகம் மற்றும் மறு பள்ளயம், அலங்கார பூஜையுடன் மஹாசிவராத்திரி பூஜை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !