அகோபில மடத்தின் ஜீயர் ஸ்ரீரங்கம் வருகை
ADDED :2059 days ago
திருச்சி :ஆந்திராவில் உள்ள அகோபில மடத்தின், 46வது பட்ட ஜீயர் ஸ்ரீமத் சடகோப நாராயண யதீந்திர மகா தேசிகர், நேற்று திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வருகை தந்தார். கோவில் சார்பில், இணை ஆணையர் ஜெயராமன், பழங்கள் கொடுத்து, மரியாதை செய்து வரவேற்றார். அப்போது கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அறங்காவலர் ஸ்ரீநிவாசன், முன்னாள் அறங்காவலர் கனகவல்லி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.