பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம்
சென்னை: ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள, பிரசாந்தி நிலையத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், சத்ய சாய்பாபாவின் பிரசாந்தி நிலைய ஆசிரமம் உள்ளது. அங்குள்ள, சாய் குல்வாட் அரங்கில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தி பாடல்கள், வேத மந்திரங்கள் உடன், நேற்று முன்தினம் மாலை, 4:20 மணிக்கு, மஹா சிவராத்திரி நிகழ்ச்சி துவங்கியது.பின், பல்லக்கில், சத்ய சாய்பாபா படம் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, சாய் ஈஸ்வரலிங்கம் எடுத்து வரப்பட்டது. அதற்கு, பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, பழங்கள், இளநீர், உள்ளிட்ட, 18 பிரசாதங்கள் அடங்கிய, மஹா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டன. பின், அழகிய மலர்களால், சாய் ஈஸ்வரலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, மஹா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளும், இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உலக அமைதிக்காக, மஹா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.