அங்காள பரமேஸ்வரி மாசி திருவிழா: தேர் இழுத்த பக்தர்கள்
ADDED :2153 days ago
குளித்தலை: மேட்டுமருதூர், அங்காளபரமேஸ்வரி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்தது. குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் மகா சிவாத்திரியை இரவு, 12:00 மணியளவில் சுடுகாட்டில் எறிகாவல் பூஜை நடந்து. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சேலம், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகாவில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்துகொண்டனர். இன்று மதியம் கிடாவெட்டு அடைசல் விருந்து நடைபெறுகிறது.