அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED :2255 days ago
ராமேஸ்வரம்: மாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.
ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, சிவசிவ என கோஷமிட்டு அக்னி கடலில் புனித நீராடினர்.பின் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி,அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். பகல் 2:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்த வாரி நடந்தது.