உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்பிக்கையுடன் வாழுங்கள்

நம்பிக்கையுடன் வாழுங்கள்

* நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.
* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது. உழைப்பிற்கேற்ப ஊதியம் உண்டு.
* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான்.
* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.
* ஒரு தலைமுறை போகிறது. இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால் பூமியோ என்றும் நிலைத்திருக்கும்.
* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமானம்.
* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.
பைபிள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !