உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த பிப்ரவரி 21 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருவிழா நான்காம் நாளான இன்று பக்தர்கள் மஞ்சளாற்றங்கரையில் இருந்து அக்கினிச்சட்டி மற்றும் கரும்பு தொட்டில் கட்டி எடுத்து சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !