சாமுண்டீஸ்வரி கோயிலில் பொங்கல் விழா
ADDED :2051 days ago
வேடசந்துார்: வேடசந்துார் இ.சித்துார் சாமுண்டீஸ்வரி கோயிலில் 301 பொங்கல் வைக்கும் விழா மற்றும் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், அம்மனுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சீர் வரிசை வழங்குதல், அலகு போடுதல், அக்னிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் 301 பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.