உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவம் துவங்கியது

சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவம் துவங்கியது

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர்  ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகம்   பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி விழாவுக்கான கொடிமரத்தின் கண்திறப்பு பூஜை ராமமந்திரத்தில் நடந்தது.  தொடர்ந்து   கோயிலில் பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிேஷகங்கள் நடக்க   கொடியேற்றம் நடந்தது. மாலையில் கோயில் வளாகத்தில் திருமுறை பாராயணம் நடந்தது. இரவில் அம்பாள் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருஷத்திலும் வீதி உலா  வந்தனர். பத்து நாட்கள் நடக்கும்  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  மார்ச் 5ல்  திருக்கல்யாணம், மறுநாள்  தெப்பத்திருவிழா, மார்ச் 7ல் தேர்த்திருவிழா  நடைபெறுகிறது.  விழா நாட்களில் தினமும்  அம்பாள், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மாலையில்  பக்தி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !