மார்ச் 8 ல் மாமல்லபுரம்தெப்ப உற்சவம்
ADDED :2045 days ago
மாமல்லபுரம்;மாமல்லபுரம், தெப்ப உற்சவத்திற்காக, திருக்குள புதர் கொடிகள் அகற்றப்பட்டன.
மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வரும் 8ம் தேதி, தெப்ப உற்சவம் நடக்கிறது. இவ்வூர், புண்டரீக புஷ்கரணி எனப்படும், திருக்குளத்தில், சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தில் வலம் வருவார்.கடந்த கோடையில், குளம் வறண்டபோது, தனியார் நிறுவனம், குளத்தை துார் வார, அனுமதி கோரியது. அறநிலையத் துறை, அனுமதிக்க தாமதத்தால், துார் வாரப்படாமல், மழைக்காலத்தில், நீர் நிரம்பியது.தற்போது, தெப்ப உற்சவம் நடக்கவுள்ள நிலையில், கோவில் நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம், குளத்து புதரை அகற்றியது.