அரியனேந்தல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை
ADDED :2046 days ago
பரமக்குடி:-பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், அக்கினி வீரபத்திர சுவாமி கோயிலில் மாசித் திருவிழா நடந்தது.இக்கோயிலில் மாசி களரி விழாவையொட்டி, ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.