ராகவேந்திரர் அவதார தின விழா
ADDED :2042 days ago
திண்டிவனம்:திண்டிவனம் ராகவேந்திரா சுவாமிகளின் அவதார தின விழா நடந்தது.
திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள பெலாக்குப்பத்தில், ராகவேந்திரா சுவாமிகள் தியான மண்டபம் உள்ளது. இதில், ராகவேந்திரா சுவாமியின் 425வது ஆண்டு அவதார தின விழா நேற்று காலை நடந்தது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு ராகவேந்திரா சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சாவித்திரி, முன்னாள் கவுன்சிலர் திருவேங்கடம் உட்பட பலர் பங்கேற்றனர்.