பைரவருக்கு அஷ்டமி பூஜை
ADDED :2043 days ago
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மஹா கால பைரவர் கோவில்.இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை நாட்களில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.நேற்று, வளர்பிறை அஷ்டமியை ஒட்டி, காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.