உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம் 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி கோவில் சார்பில் சக்தி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த மாதம், 28ம் தேதி முதல் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பூவோடு எடுத்து வழிபடுகின்றனர். கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்தை தொடர்ந்து, நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருகல்யாண வைபவம் நடந்தது. காலை 6:00 மணி முதல் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர்.காலை, 10:00 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கண்டுகளிக்க, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருக்கல்யாணத்தையொட்டி, கோவில் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. காவல் தெய்வமான மாரியம்மனுக்கு, திருமணச்சீராக பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் சீர்வரிசைகள் கொண்டு வந்து படைக்கப்பட்டன.திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, நேற்று இரவு, முதல் நாள் வெள்ளி தேரோட்டம் தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் தேரோட்டம், வரும், 6ம் தேதி மூன்றாம் நாள் தேராட்டம், தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவ நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. வரும், 7ம் தேதி காலை மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல்; 9ம் தேதி இரவு மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !