காரைக்குடி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :2054 days ago
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது.காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டுதோறும், திருவிழாவின் முன்னதாக உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். அதனடிப்படையில், கோயிலின் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. பரமக்குடி உதவி ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த உண்டியல் எண்ணும் பணியில், உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் மற்றும் மகளிர் சேவைக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில், 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் இருந்தது. 58 கிராம் தங்கம், 167 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. ஏற்பாடுகளை ஆய்வாளர் சடவர்ம பூபதி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.