சுவாமி தீர்த்தவாரி கடற்கரை சீரமைப்பு
ADDED :2119 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், சுவாமி தீர்த்தவாரி கடற்கரை சீரமைக்கப்பட்டது.மாமல்லபுரத்தில், நாளை மறுநாள், ஸ்தலசயன பெருமாள், மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. உற்சவம், ஒற்றைவாடைத் தெரு பகுதி, கடற்கரையில் நடக்கும் நிலையில், இப்பகுதியில், அசுத்த நீர் தேங்கி, சுகாதார சீர்கேடுடன் இருந்தது. உற்சவத்தின்போது, பக்தர்கள் சிரமப்படும் நிலை காணப்பட்டது.இதை சீரமைக்க வலியுறுத்தி, நம் நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம், நீர்த்தேக்க பள்ளத்தை, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், மணலால் மூடி, நீர் தேங்கிய பகுதியை சமன் செய்து சீரமைத்தது.