வல்லடிகாரர் கோயிலில் தேரோட்டம்
ADDED :2059 days ago
மேலுார் : மேலுார் அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி நடந்த திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.தேரில் விநாயகர், வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்களை அம்மன் எழுந்தருளினர். வெள்ளலுார் நாடு அன்னதான குழு மற்றும் மக்கள் சேவை மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.