தட்டாஞ்சாவடியில் இன்று சுவாமி வீதியுலா
ADDED :2059 days ago
புதுச்சேரி:புதுச்சேரியில் நாளை நடைபெறும் மாசி மகத்தில் கலந்து கொள்ள, தீவனுார் விநாயகர், மயிலம் சுப்ரமணியசுவாமி, செஞ்சி அரங்கநாதர், வானுார் ராயப்புதுப்பாக்கம் அழகம்மை உடனமர் அரசனேஸ்வர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.முன்னதாக இன்று காலை 7:00 மணிக்கு, தட்டாஞ்சாவடி சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், கெங்கையம்மன், பொற்கலை பூரணி உடனுறை குண்டுதாங்கிய அய்யனாரப்பன் கோவில் சார்பில், தட்டாஞ்சாவடியில் எழுந்தருளும் சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சுவாமி வீதி உலா நடக்கிறது.